

சேலத்தில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை காரணமாகப் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு முதலே விடிய விடிய லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியது. இன்று காலையில் மழை தொடர்ந்து விட்டு விட்டுப் பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பல்வேறு பணிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
மேலும், சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். கொட்டு மழையும் பொருட்படுத்தாமல் பள்ளி குழந்தைகள் கொட்டும் மழையில் நனைந்தபடி சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதேபோல் ஏற்காட்டில் கடந்த ஒரு வாரக் காலமாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று தொடர் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி விடுமுறை அளித்துள்ளது மாவட்ட நிர்வாகம். ஆனால் ஏற்காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏற்காட்டில் உள்ள மலைக் கிராமங்களிலிருந்து வரும் மாணவ மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் குடைபிடித்துச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
தொடர் மழை மற்றும் பனிமூட்டம் காரணத்தால் ஏற்காட்டில் கடும் குளிர் அதிகரித்துள்ள நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் ரெயின் கோட் மற்றும் ஜெர்கின் அணிந்தே செல்கின்றனர். தொடர் மழை காரணமாக ஏற்காட்டில் கடுங்குளிர் நிலவி வருவதால் குறைந்த அளவிலேயே பள்ளிக்கு மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர்.
இதையும் படிக்க: அமெரிக்க விசா கிடைக்காததால் பெண் மருத்துவர் தற்கொலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.