உங்கள் எஸ்.ஐ.ஆர்., படிவம் பதிவேற்றப்பட்டுவிட்டதா? அறிந்துகொள்வது எப்படி?
உங்கள் எஸ்.ஐ.ஆர். படிவம் தேர்தல் ஆணைய இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதா?... இதனை சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி அறிந்துகொள்ளலாம்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ( எஸ்.ஐ.ஆர்.,) பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (பி.எல்.ஓ.,) வழங்க வேண்டும்.
நாம் வழங்கிய படிவங்களை தேர்தல் ஆணையத்தின், வாக்காளர் சேவை பக்கத்தில் (VOTERS’ SERVICE PORTAL) வாக்குச்சாவடி நிலை அலுவலர் பதிவேற்றம் செய்வார்.
அவர் பதிவேற்றம் செய்துவிட்டாரா? இல்லையா? என்பதை பின்வருமாறு அறிந்துகொள்ளலாம்.
முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
பெயர், செல்போன் எண், கொடுத்து சைன்-அப் (Sign-Up) செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
(ஒருமுறை சைன்-அப் செய்தால், அடுத்தடுத்த முறைகளுக்கு லாக்-இன் செய்துகொள்ளலாம்)
பின்னர், எஸ்ஐஆர் 2026 பகுதியில் உள்ள Fill Enumeration Form என்ற பகுதிக்குச் சென்று கிளிக் செய்ய வேண்டும்.
இதில், வாக்காளரின் மாநிலம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் எண் கேட்கப்படும். அவற்றைக் கொடுக்க வேண்டும்.
நீங்கள் கொடுத்த விவரம் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தால், ''Submitted'' என்று காட்டும்.
அப்படி இல்லாமல், "ஆதார் படிவத்தை சமர்ப்பிக்கவும்" என்று காட்டினால், வாக்குச்சாவடி நிலை அலுவலர் உங்கள் படிவத்தை இன்னும் சப்மிட் செய்யவில்லை என்று பொருள்.
இப்பக்கத்திலேயே வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர் மற்றும் அவரின் தொலைபேசி எண் காட்டும். அதில் தொடர்புகொண்டு விவரங்களை அறியலாம்.
how to know status of sir form submitted by BLO
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

