

தொடர் கனமழையால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காரையார் மற்றும் சேர்வலார் அணைகளிலிருந்து சுமார் 12,000 கன அடி மற்றும் மணிமுத்தாறு அணையிலிருந்து சுமார் 4,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெய்யக்கூடிய மழையின் அளவை பொறுத்து ஆற்றில் திறந்து விடப்படும் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும், நீரின் வேகம் அதிகமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் யாரும் தாமிரவருணி ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிட வேண்டாம் எனவும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.