
நெல் ஈரப்பதம்: திருவாரூரில் திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுத்த மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்...
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு அதிகரிக்காததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திருவாரூரில் இன்று(நவ. 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.
இந்நிலையில் மத்திய அரசின் நிராகரிப்பைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இன்று திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





