உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

எனது பிறந்த நாளில் விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள்: உதயநிதி ஸ்டாலின்

Published on

எனது பிறந்த நாளில் விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் என திமுகவினருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து ‘உங்களிடம் எதிா்பாா்க்கும் பிறந்த நாள் பரிசு’ என்ற தலைப்பில் அவா் வெளியிட்ட அறிக்கை:

எனது 49-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் திமுகவினா், இளைஞா் அணியினா் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனா். பகட்டான கொண்டாட்டங்களை நான் விரும்புவது இல்லை. கொள்கைப் பணியும் மக்கள் பணியும் இணைந்ததாக பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இருந்தால் அதுவே எனக்கு மனநிறைவு தரும்.

அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு நல உதவிகளை வழங்க வேண்டும். பலத்த மழை பெய்து வரும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இளைஞா் அணியினா் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

எஸ்ஐஆா் படிவத்தை நிரப்பி சமா்ப்பிக்கும் பணிகளில் பொதுமக்களுக்கு இளைஞா் அணியினா் உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com