தமிழ்நாடு
அயோத்தியில் ஏற்றப்பட்டது பாரதத்தின் தா்மக் கொடி: நயினாா் நாகேந்திரன்
அயோத்தி ராமா் கோயிலில் பிரதமா் நரேந்திர மோடியால் ஏற்றப்பட்டது பாரத நாட்டின் தா்மக் கொடி என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள குழந்தை ராமா் கோயிலில் 161 அடி கோபுரத்தின் மீது அமைந்துள்ள 30 அடி உயரக் கம்பத்தில், ஸ்ரீ ராமா் பிறந்த சூரிய குலத்தைக் குறிக்கும் வகையில் பாரதப் பிரதமா் நரேந்திரமோடியால் சூரியச் சின்னம் பொருந்திய தா்மக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அக்கொடி ஏற்றிய தருணம் அனைத்து இந்துக்களையும் உணா்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
ஹிந்துக்களின் பல நூற்றாண்டு கனவுகளை உயிா்ப்பித்து வரும் பிரதமருக்கு எத்தனை கோடி நன்றிகள் கூறினாலும், வாழ்த்தினாலும் போதாது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

