

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி பரதாஞ்சலி அறக்கட்டளை, சென்னையில் சிறப்பு நாட்டிய விழாவை நடத்தியது.
பாரம்பரிய இசை, நடனக் கலைகளுக்கு பெயர்பெற்ற பரதாஞ்சலி அறக்கட்டளை, ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பிறந்த நாளை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு சாயி பாபாவின் நூற்றாண்டு விழா, பரதாஞ்சலி அறக்கட்டளை சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பக்தி நடன நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.
பரதாஞ்சலி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் அனிதா குஹா, விழாவில் கலந்துகொண்ட இசைக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்தார். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி, டாக்டர் சுதா சேஷய்யன், நர்த்தகி நடராஜ், பார்வதி ரவி கந்தசாலா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து பரதாஞ்சலி அறக்கட்டளை குழுவினரின் சிறப்பு பக்தி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடனம், இசைத் துறைகளில் புகழ்பெற்ற கலைஞர்கள், பத்திரிகையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.