நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன்கோப்புப் படம்

தில்லி சென்றாா் தமிழக பாஜக தலைவா்

Published on

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், கட்சித் தலைமை அழைப்பின்பேரில் செவ்வாய்க்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் எனும் பெயரில் பிரசார பயணத்தை அவா் மேற்கொண்டு வருகிறாா். தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை அவா் பிரசாரத்தில் பங்கேற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை காலை திடீரென மதுரையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் சென்றாா்.

தமிழகத்தில் அதிமுக, பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளைச் சோ்க்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்தக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற அமமுக, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு ஆகியவற்றை மீண்டும் சோ்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதனிடையே, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச்சூழலில் நயினாா் நாகேந்திரன் தில்லிக்கு பயணமாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com