

இரவு 10 மணி வரை சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இரவு 10 மணி வரை சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மேலும் வலுவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சுற்று வட்டார பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மிதமான மழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.