திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4 வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து..
திற்பரப்பு அருவி வழியாக பெருக்கெடுத்துப் பாய்ந்த கோதையாற்று வெள்ளம்.
திற்பரப்பு அருவி வழியாக பெருக்கெடுத்துப் பாய்ந்த கோதையாற்று வெள்ளம்.கோப்புப் படம்
Updated on
1 min read

கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4 வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மழையால் கன்னியாகுமரியிலுள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி உள்பட தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்பே அறிவித்திருந்தது.

கன்னியாகுமரியில் பெய்து வரும் மழையால், மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகியவற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தொடர் மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு 4 வது நாளாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க | இன்று உருவாகிறது சென்யார் புயல்!

Summary

heavy rain ban for tourist in Thirparappu Falls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com