

சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் மத்த்யில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'மிஸ்' செய்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வி.கே.சிங்கின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வி.கே. சிங்கின் நினைவு நாளில் அவரை புகழ்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.கே. சிங்கின் புகழ் ஓங்குக! தமிழ்நாடும் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்!
பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர்! தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது. 2023-ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங்கின் முழுவுருவச் சிலை!
ஈடபுள்யூஎஸ், நீட் என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'மிஸ்' செய்கிறோம்.
சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங்கின்நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.