ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரயில்களில் தூங்கும் வசதி பெட்டிகளில் கட்டண அடிப்படையில் படுக்கை விரிப்புகள்!

ரயில்களில் தூங்கும் வசதி பெட்டிகளில் கட்டண அடிப்படையில் படுக்கை விரிப்புகள்...

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ரயில்வே கோட்டத்தில் தூங்கும் வசதி பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு, கட்டண அடிப்படையில் படுக்கை விரிப்புகள் வழங்கும் நடைமுறை வருகிற ஜனவரியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் தூங்கும் வசதி பெட்டிகளில் பயணிப்போருக்கும் (குளிா்சாதன வசதி பெட்டிகளின் பயணிகளுக்கு வழங்கப்படுவது போல) படுக்கை விரிப்புகள் வழங்கும் முன்னோடித் திட்டம் 2026 ஜனவரி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

பயணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் கட்டணம் செலுத்தி பயணிகள் படுக்கை விரிப்புகளைப் பெறலாம்.

ரயில்களில் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா் இந்தச் சேவையை வழங்குவாா். கட்டணமாக படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் அதற்கான உறையுடன் ரூ.50, தலையணை உறையுடன் மட்டும் ரூ.30, படுக்கை விரிப்பு மட்டும் ரூ.20 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு உரிமக் கட்டணமாக ரூ.28.27 லட்சம் வருவாய் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.