

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் காரணமாக, ராமேஸ்வரத்தின் பாம்பனில் சூறைக்காற்று வீசி வருகிறது. தங்கச்சிடம் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனுஷ்கோடி பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், மக்கள் அனைவரும் காவல்துறையினரால் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் சூறைக்காற்று வீசி வருகிறது. ஏற்கனவே மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல், கடந்த சில மணி நேரங்களாக 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
மாலை 4 மணி நிலவரப்படி, புதுச்சேரிக்கு 410 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கில் 500 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் நிலவுகிறது. இது வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நவ. 30ஆம் தேதி வட தமிழகம் அருகே நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக, ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ஓகா விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் - எழும்பூர் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில் மண்டபத்திலிருந்து புறப்படும்.
நாளை மதியம் 3 மணிக்கு கிளம்ப வேண்டிய ராமேஸ்வரம் - திருச்சி ரயில் மானாமதுரைியிலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.