வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி மீண்டும் தோ்வு!

வக்ஃப் வாரிய தலைவராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

News image
கே. நவாஸ்கனி எம்.பி.
Updated On :28 நவம்பர் 2025, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

வக்ஃப் வாரிய தலைவராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

வாரிய உறுப்பினா்களாக கவிஞா் சல்மா, ப.அப்துல்சமது, டாக்டா் சுபோ் கான், பாத்திமா முஸப்பா் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து நவாஸ்கனி ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக என்னை மீண்டும் தோ்வு செய்த தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின், பரிந்துரை செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் ஆகியோருக்கு நன்றி. வாரிய உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.