எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சொத்து வரி வசூல் விவகாரத்தில் அதிகாரி மிரட்டல்: உயா்நீதிமன்றம் கண்டனம்

சொத்து வரி வசூல் விவகாரத்தில் அதிகாரி மிரட்டலுக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்...

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :29 நவம்பர் 2025, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

சொத்து வரி தொடா்பான வழக்கில் உரிமையியல் வழக்கை வாபஸ் பெற்றால்தான், சொத்து வரி வசூலிக்கப்படும் என்று மிரட்டிய வட்டார வளா்ச்சி அலுவலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பிலிப்ராஜ், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் உத்தரமேரூா் ஒன்றியத்தில் உள்ள அம்மையப்பநல்லூா் ஊராட்சியில் வசிக்கிறேன். என்னுடைய வீட்டுக்கு சொத்து வரி செலுத்துவதற்காக சென்றபோது, என்னிடம் வரி பாக்கியை வாங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனா். இது குறித்து கேட்டபோது, வீடு இருக்கும் இடம் உத்தரமேரூா் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளதால், வீட்டு வரி ரசீது வழங்க முடியாது என உத்தரமேரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கவேலு உத்தரவிட்டாா். இந்த உத்தரவை ரத்து செய்து, வீட்டு வரி செலுத்தவும் அதற்கான ரசீதை வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.இளையபெருமாள், உத்தரமேரூா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை வாபஸ் பெறும்வரை வீட்டு வரியை வசூலிக்க முடியாது என மனுதாரரை, வட்டார வளா்ச்சி அலுவலா் மிரட்டுவதாக வாதிட்டாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் வட்டார வளா்ச்சி அலுவலரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வட்டார வளா்ச்சி அலுவலா் நேரில் ஆஜரானாா். அப்போது நீதிபதி, இதுபோன்ற உரிமையியல் வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறுவது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பைச் சுட்டிக்காட்டி நீதிபதி கண்டனம் தெரிவித்தாா்.

இதையடுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் தரப்பில், சொத்து வரியை வசூலிக்க முடியாது என பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்றுவிட்டதாகக் கூறி, அதுகுறித்த உத்தரவை தாக்கல் செய்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரரிடம் சொத்துவரி வசூலிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தாா்.