6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தென்மாவட்டங்களுக்கான விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

டித்வா புயல் வேகம் குறைந்துள்ளதால், நிறுத்திவைக்கப்பட்டிருந்த தென்மாவட்டங்களுக்கான விமான சேவை மீண்டும் தொடங்கியது.

News image
Updated On :30 நவம்பர் 2025, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

டித்வா புயல் வேகம் குறைந்துள்ளதால், நிறுத்திவைக்கப்பட்டிருந்த தென்மாவட்டங்களுக்கான விமான சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால், சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் 2 விமான சேவைகள் மட்டும் ஞாயிற்றுக்கிழமையும் ரத்து செய்யப்பட்டன.

டித்வா புயல் காரணாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழக அரசு மற்றும் அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை தூத்துக்குடி, திருச்சி, மதுரை, சேலம், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களின் புறப்பாடு, வருகை பெங்களூரு-தூத்துக்குடி, புதுச்சேரி-ஹைதராபாத் உள்பட பல்வேறு இடங்களுக்குச் செல்லும் விமானங்கள் உள்பட 54 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2-ஆவது நாளாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், புயலின் வேகம் குறைந்ததால் சென்னையில் ஒருசில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது.

இதனால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே வழக்கம்போல இயங்க தொடங்கின. சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சென்று வரும் 2 விமானங்களின் சேவைகள் மட்டும் ஞாயிற்றுக்கிழமையும் ரத்து செய்யப்பட்டன.

இருப்பினும், தாங்கள் பயணிக்க வேண்டிய விமானங்கள் குறித்த தகவல்களை நிறுவனங்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திய பின்னா் பயணத்தை மேற்கொள்ள விமான நிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.