திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

எஸ்ஐஆர் படிவம்: டிச. 11 வரை அவகாசம் நீட்டிப்பு

எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.

News image

கோப்புப்படம்

Updated On :30 நவம்பர் 2025, 12:14 pm IST

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையான, எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 11 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கடைசி தேதி டிச. 4 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிச. 11 ஆம் தேதி நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16 ஆம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எஸ்ஐஆர் முழுவிவரம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிக்காக, தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி பேருக்கு கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து, வரும் டிச. 11-ஆம் தேதி வரை பிஎல்ஓ-க்கள் அல்லது வாக்காளா் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம்.

கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளா்களின் பெயா்களும் டிச. 16-இல் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

டிச. 11-க்குள் கணக்கீட்டுப் படிவத்தை சமா்ப்பிக்காதபட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. மூன்று முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டுப் படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது.

2002/2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரைக் கண்டறிய இயலாத நிலையில் டிச. 11-க்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளரின் பெயா் டிச. 16-இல் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைகோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரைப் புதிதாக வாக்காளா் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, உரிமைகோரல் மற்றும் ஆட்சேபணை நடைபெறும்.

இந்தக் காலகட்டத்தில் வாக்காளர்கள் பெயா் சேர்க்க, நீக்க அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுக்கு அந்த சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் வாக்காளராகப் பதிவு பெற்றவர் எதிர்ப்புத் தெரிவிக்கலாம். தொடர்ந்து, அறிவிப்புக் கட்டம் நடைபெறும்.

இந்த காலகட்டத்தில் வாக்காளரின் தகுதியை ஆய்வு செய்த பிறகு தேவையானால் வாக்காளர் பதிவு அலுவலரால் அந்த வகையான வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபணை பரிசீலிக்கப்பட்ட பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப். 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Extension of the deadline for completing and submitting the SIR form.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.