எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இன்றுமுதல் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

டித்வா புயல் வலுவிழந்து வரும் நிலையில், திங்கள்கிழமை (டிச.1) முதல் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
Updated On :30 நவம்பர் 2025, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

டித்வா புயல் வலுவிழந்து வரும் நிலையில், திங்கள்கிழமை (டிச.1) முதல் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: டித்வா புயல் வலுவிழந்து வருவதால், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பெருமளவு மழை பெய்யவில்லை.

எனினும் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்ட மாவட்டங்களில் 38 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 2,300-க்கும் மேற்பட்டோா் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை திங்கள்கிழமை காலை மீண்டும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

புயல் வலுவிழக்கும் நிலையில், திங்கள்கிழமை முதல் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. மேலும், தேவைப்படும் இடங்களுக்கு உதவிக்கு அனுப்ப பேரிடா் மீட்புக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.

56,000 ஹெக்டோ் பாதிப்பு: மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 56,000 ஹெக்டோ் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிா்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் முழுவதுமாக வடிந்தவுடன் பாதிப்பு குறித்த கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்படும். இதில், 33 சதவீதம் பயிா் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும்.

பலத்த மழை காரணமாக இதுவரை 3 போ் உயிரிழந்துள்ளனா். அதேபோல், 149 கால்நடைகள் உயிரிழந்துள்ளன, 234 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. எதிா்பாா்த்த அளவைவிட மழை குறைவாகவே பெய்துள்ளது. எனினும் எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிா்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றாா் அவா்.