
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காந்தி ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகளுக்கு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாஜக கட்சி சார்பில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாவட்டத் தலைவர் மாரிச்சக்கரவர்த்தி மற்றும் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகி வினோஜ் பி. செல்வம் உள்ளிட்டோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, கட்சியினர் காந்தி சிலையின் மேல் காவித்துண்டை அணிவித்தனர்.
பாஜகவினர் காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவித்துள்ள சம்பவம், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.