அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி: செங்கோட்டையன்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Sengottaiyan
செங்கோட்டையன் கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன், "ஒருங்கிணைப்புப் பணி நடந்து கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள். அடுத்தகட்ட முடிவு பற்றி இன்னும் யோசிக்கவில்லை.

தனது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவது அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் நீக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் விரைவில் நன்மை நடக்கும்.

யார் பக்கமும் எந்த ரியாக்ஷனும் இல்லை. என்னுடைய அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி.

எடப்பாடி பழனிசாமி தனது பிரசார பயணத்தில் கோபிசெட்டிபாளையம் வழியாக வருகிறார் என எனக்கு எந்த தகவலும் இல்லை" என்று கூறினார்.

அதிமுக விவகாரம்

அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்த நிலையில் செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார் இபிஎஸ்.

இதைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அரசியல் நகர்வுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக்கூறி வருகிறார்.

தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்துவிட்டு வந்தார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

Summary

Being calm is a sign of success: former ADMK minister Sengottaiyan press meet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com