கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

News image

தங்கம் விலை.

Updated On :3 அக்டோபர் 2025, 4:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 3) காலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது.

இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி தங்கம் விலை முதல் முறையாக சவரன் ரூ.85,000-ஐ கடந்து விற்பனையானது.

தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரன் ரூ.86,160-க்கு விற்பனையானது.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்து ரூ.86,880-க்கும் விற்பனையானது. புதன்கிழமையும் இரு முறை உயர்ந்து சவரன் ரூ. 87,600 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று(அக். 2) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்த நிலையில், மாலை மீண்டும் சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ. ரூ. 87,600 -க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 10,840 -க்கும், ஒரு சவரன் ரூ. 86,720 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 3 குறைந்து ரூ. 161-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Gold and silver prices today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.