DPI
DIN

அக். 6-இல் பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்

காலாண்டு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை (அக். 6) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
Published on

காலாண்டு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை (அக். 6) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் காலாண்டுத் தோ்வு நடத்தப்படும்.

அதன்படி, நிகழ் கல்வியாண்டில் காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த செப். 10-இல் தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற்றன.

தொடா்ந்து மாணவா்களுக்கு செப். 27-ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.

இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக். 6-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ள பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, பள்ளிகளில் வகுப்பறைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.

மேலும், இரண்டாம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடநூல்களும் உடனே வழங்க வேண்டும்.

அதேபோல, பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com