எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழ்நாடு பாஜகவின் கட்டுப்பாட்டில் வராது! - முதல்வர்

பாஜக குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்...
mk stalin
ராமநாதபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்X / mk stalin
Published on
Updated on
1 min read

எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழ்நாடு உங்களுடைய(பாஜக) கட்டுப்பாட்டில் வராது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 738 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியது குறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க. கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? நிச்சயமாக அக்கறை இல்லை!

முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்! அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க.

பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.

எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோது தமிழ்நாடு உங்களுடைய கட்டுப்பாட்டில் வராது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், "தவறு செய்தவர்கள் தவழ்ந்து சென்று தஞ்சமடையும்வாஷிங் மெஷின்-தான் பா.ஜ.க.

அங்கு சரணாகதி அடைந்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களுக்குத் துணைபோகும் கொள்கையற்ற கூட்டத்தைப் புறந்தள்ளி, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டி, நாட்டுக்கே வழிகாட்டும் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நம்முடைய ஆட்சி தொடரத் துணை நிற்கும் உங்கள் அனைவரின் உறுதியை, இராமநாதபுரம் மக்களிடம் கண்டேன்!" என்று கூறியுள்ளார்.

Summary

Tamil Nadu will not come under BJP control: MK stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com