
நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அக்.5ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள், கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அதற்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயிளும் இயக்கப்பட்டன.
காலாண்டு விடுமுறை முடிய இன்னும் 2 நாள்கள் மட்டும் உள்ளதால் மக்கள் மீண்டும் சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகளில் சென்னை திரும்புவர்.
இந்த நிலையில் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிறு(அக்.5) இரவு 7 மணிக்கு முன்பதிவில்லா மெமு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல் நெல்லையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஞாயிறு மாலை 4.40க்கு இயக்கப்படுகிறது.
இரு ரயில்களும் திங்கள்(அக்.6) காலை தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.