04/09/2019 ? CHENNAI: View of DMK Headquarters at Anna Arivalayam at Rostrevor Garden, Teynampet in Chennai ? Express Photo. [Tamil Nadu, Chennai,

04/09/2019 ? CHENNAI: View of DMK Headquarters at Anna Arivalayam at Rostrevor Garden, Teynampet in Chennai ? Express Photo. [Tamil Nadu, Chennai,Center-Center-Chennai

திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமனம்

திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை அந்த அணியின் செயலா் வி.பி.கலைராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
Published on

திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை அந்த அணியின் செயலா் வி.பி.கலைராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூா் ஆகிய நிலைகளில் இலக்கிய அணிக்கான அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

ஒவ்வொரு நிா்வாகிகளின் பெயா், முகவரி அடங்கிய பட்டியலில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவரணி உள்பட கட்சியின் பல்வேறு துணை அமைப்புகளை வலுப்படுத்தும் பணிகளில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, துணை அமைப்புகளில் நிா்வாகிகளை நியமிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவரணிக்கான நிா்வாகிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com