எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ’மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறாா். இந்நிலையில், நாமக்கல்லில் திட்டமிட்டிருந்த பிரசாரம் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, நாமக்கல் சுற்றுப்பயணம் அக்.5, 6 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அப்பயணம் அக். 8 ஆம் தேதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அக்.8-ஆம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
மேலும், ஏப்.9-ஆம் தேதி நாமக்கல், பரமத்திவேலூா் ஆகிய தொகுதிகளிலும், வரும் 10-ஆம் தேதி ஈரோடு மாநகா், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.