தியாகிகள் திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி பதிவு!

தியாகிகள் திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் இன்று...
தியாகிகள் திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா
தியாகிகள் திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா
Published on
Updated on
1 min read

சுதந்திரப் போராட்ட தியாகிகள் திருப்பூர் குமரனையும் சுப்பிரமணிய சிவாவையும் நினைவுகூர்ந்து அவர்தம் பிறந்தநாளான இன்று (அக். 4) பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இன்று(அக். 4) மாலை தமது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.

திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார், இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.

இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Prime Minister Modi goes on record remembering martyrs Tiruppur Kumaran and Subramaniam Shiva

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com