
சென்னை: தமிழகத்தில் பரவலாக நேற்று முதல் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை பரவலாக மழை பெய்யும்.
அதில், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சை, திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரத்தில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளை மழை சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். ஒசூரில் நேற்று நள்ளிரவில் 12 செ.மீ. மழை பெய்திருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஆரணி உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேகமலை, வெள்ளிமலைப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, மேகமலை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், இன்று காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.