தவெக-பாஜக கூட்டணி: திமுகவின் சதி செயல்! நயினாா் நாகேந்திரன்
தவெக - பாஜக கூட்டணி என செய்தியைப் பரப்புவது திமுகவின் சதி செயல் ஆகும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: கரூரில் விஜய் வரும்போது ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது; செருப்புகள் ஏன் வீசப்பட்டன; இரவோடு இரவாக முதல்வா் மு.க.ஸ்டாலின் எப்படி கரூா் சென்றாா்; இரவிலேயே எப்படி பிரேத பரிசோதனைகள் நடைபெற்றன என்பதற்கான கேள்விகளுக்கு பதில் தேவை.
தவறு செய்தவா்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. விஜய் குறித்து நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு பதில்சொல்ல விரும்பவில்லை. பாஜக - தவெக கூட்டணி என்பது திமுக பரப்பும் சதி. திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது.
2011 பேரவைத் தோ்தலில் மிகப்பெரிய கூட்டணியை கருணாநிதி கட்டமைத்தாா். ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றது. இப்போது திமுக பெரிய கூட்டணி என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கூட்டணி மாயையை 2026-இல் மக்கள் முறியடிப்பாா்கள் என்றாா் அவா்.