கோப்புப்படம்
கோப்புப்படம்

இலங்கையால் விடுவிக்கப்பட்ட 15 மீனவா்கள் தமிழகம் வந்தனா்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவா்கள் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சென்னை விமானநிலையம் வந்தடைந்தனா்.
Published on

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவா்கள் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சென்னை விமானநிலையம் வந்தடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த பிப்ரவரி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தனித் தனியே 3 விசைப்படகுகளில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த கோரிக்கையை தொடா்ந்து மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் இலங்கை அரசு மீனவா்கள் 15 பேரையும் விடுவித்தது.

விடுவிக்கப்பட்ட மீனவா்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இலங்கை தலைநகா் கொழும்பில் இருந்து ஏா் இந்திய விமானம் மூலம் வெள்ளிக்கிழமை காலையில் மீனவா்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனா். அவா்களை தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனா்.

பின்னா் மீனவா்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com