திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

டிஜிட்டல் அரெஸ்ட்டில் சிக்காமல் இருக்க பொதுமக்களுக்கு இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் கூறும் சில அறிவுரை...

News image

கோப்புப்படம் - IANS

Updated On :9 அக்டோபர் 2025, 4:00 pm IST

'டிஜிட்டல் அரெஸ்ட்' எனப்படும் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்காமல் இருக்கும் வகையில் பொதுமக்களுக்கு இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் சந்தீப் மிட்டல் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அவை,

  • வங்கிக் கணக்குகளை திறப்பது, சிம் பாக்ஸ்களை இயக்குவது, சிம் பாக்ஸ் அல்லது எந்தவொரு மின்னணு சாதனத்தையும் மறைவாக எடுத்துச் செல்வது போன்ற வேலைகளுக்கான கமிஷன் வாக்குறுதிகளால் ஏமாற வேண்டாம். இவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

  • நீங்கள் குற்றச்செயலில் தொடர்புடையவர் என்று கூறும் தொலைபேசி அழைப்புகளைப் பெற்றால் பதற்றம் கொள்ள வேண்டாம். மோசடிக்காரர்கள் பயத்தை உண்டாக்கி பணம் பெற முயல்வார்கள். 'டிஜிட்டல் கைது' அல்லது ஆன்லைன் கைது என்ற கருத்தே இல்லை.

  • அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் எந்த புகார் அல்லது சரிபார்ப்பிற்காகவும் பணம் கேட்க மாட்டார்கள்.

  • ஆதார், பான் (PAN), வங்கி விவரங்கள் அல்லது ஓடிபி-கள் (OTP) உள்ளிட்ட தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை தொலைபேசி அல்லது விடியோ அழைப்பின் மூலம் பிறருக்கு பகிர வேண்டாம்.

  • அதிகாரிகள் எனக் கூறி, செய்யறிவு (ஏஐ) அல்லது பதிவுசெய்யப்பட்ட விடியோக்களைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயலும் அந்நியர்களிடமிருந்து வரும் விடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

  • AnyDesk, TeamViewer போன்ற ரிமோட் அணுகல் செயலிகளை அந்நியர்கள் கேட்டால் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்; இது உங்கள் கருவியை மோசடிக்காரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும்.

டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்கவும்.

Summary

Digital Arrest: What advice does the Cyber ​​Crime Unit give to people?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.