Indigo flight
கோப்புப்படம்

மழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்!

மழை பெய்ததால், விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் வானில் வட்டமடித்தபடி இருந்தன.
Published on

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் வானில் வட்டமடித்தபடி இருந்தன.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் இலங்கையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் உள்பட தில்லி, மும்பை, கொச்சி, கோவா, மதுரை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலிருந்து வந்த 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. மழை நின்ற பிறகு அந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின.

அதேபோல் சென்னையில் இருந்து அபுதாபி, மஸ்கட், தில்லி, மும்பை, ஹைதராபாத் பெங்களூரு, தூத்துக்குடி உள்ளிட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இலங்கையிலிருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் பலத்த சூறைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதே போல், தில்லி, மும்பை, கொச்சி, கோவா, மதுரை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை வந்த 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தன.

மழை நின்ற பிறகு அந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனா். அதேபோல், சென்னையிலிருந்து அபுதாபி, மஸ்கட், தில்லி, மும்பை, ஹைதராபாத் பெங்களூரு, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com