பாமக நிறுவனர் ராமதாஸ்கோப்புப் படம்
தமிழ்நாடு
ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி
பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இதய சிகிச்சை நிபுணா்கள் திங்கள்கிழமை பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனா். கடந்த 2013-இல் இதே மருத்துவமனையில் ராமதாஸுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவமனைக்குச் சென்று இதய பரிசோதனை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.