முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் எதிர்புறத்திலும் கேள்வி கேட்க வேண்டும்: செந்தில்பாலாஜி

செய்தியாளர்களுக்கு செந்தில்பாலாஜி எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்.

News image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

Updated On :5 அக்டோபர் 2025, 12:51 pm IST

கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்க்கலாம் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுக கோவை மாநகர மாவட்ட பொறுப்பாளராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தமிழ் செல்வன் இன்று பொறுப்பேற்கிறார்.

அதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களுடன் பேசிய செந்தில்பாலாஜி, ”செந்தமிழ்ச்செல்வன் முறைப்படி அவரது பொறுப்பை ஏற்கிறார். 2026 ஆம் ஆண்டு எங்கள் வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய வேண்டும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார விவகாரம் குறித்தான கேள்விக்கு, செந்தில்பாலாஜி, ”இது குறித்து ஏற்கனவே விரிவாக பேசிவிட்டேன், விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே, விசாரணை முடிந்த பிறகு அதைப் பற்றி பேசினால் சரியாக இருக்கும். எனவே, அது சம்பந்தமான கேள்விகளை தற்போதைக்கு தவிர்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

அந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு புதிய விடியோக்கள் வருவது தொடர்பான கேள்விக்கு, ”எந்தெந்த விடியோக்கள் வெளியாகிறதோ அவை அனைத்தும் விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்படும்” என்று பதிலளித்தார்.

”அரசின் மீது கேட்கப்படும் கேள்விகளை இன்னொரு பக்கம் செய்தியாளர்கள் கேட்பதில்லை என்றும் யாரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை யாரிடம் கேட்கிறோம் என்று செய்தியாளர்கள் நீங்களே சுய பரிசோதனை செய்யுங்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி” கூறினார்.

”ஏன் ஏழு மணி நேரம் தாமதமாக வந்தீர்கள்? ஏன் 500 மீட்டருக்கு முன்பாகவே வண்டிக்குள் சென்று விட்டீர்கள்? ஏன் 12 மணிக்கு என்று அறிவித்துவிட்டு ஏழு மணிக்கு வந்தீர்கள்? டிசம்பர் மாதம் திட்டமிட்டு இருந்த பிரசாரம் ஏன் முன்கூட்டியே நடந்தது? என்று கேட்டிருக்க வேண்டும்” எனக் கூறினார்.

”இருக்கின்ற சூழலை எடுத்துக் கூறுகின்ற கடமை நமக்கு உள்ளது. அந்த பொறுப்பும் நம்மிடம் உள்ளது. என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் எதிர் புறத்திலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல்லவா?” என்றார்.

கரூர் விவகாரம் தொடர்பாக தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம், விசாரணை முடிந்து அறிக்கை வந்த பிறகு மீண்டும் பேசுவோம்” என பதில் அளித்துச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.