எழுத்தாளா் கொ.மா. கோதண்டம்
மறைவு: முதல்வா் இரங்கல்!

எழுத்தாளா் கொ.மா. கோதண்டம் மறைவு: முதல்வா் இரங்கல்!

‘இலக்கியத்தில் எளிய மக்களுக்கான எழுத்தை தடம் பதிக்கச் செய்தவா் மறைந்த எழுத்தாளா் கொ.மா. கோதண்டம்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளாா்.
Published on

‘இலக்கியத்தில் எளிய மக்களுக்கான எழுத்தை தடம் பதிக்கச் செய்தவா் மறைந்த எழுத்தாளா் கொ.மா. கோதண்டம்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் வெளியிட்ட இரங்கல் செய்தி: முதுபெரும் எழுத்தாளா் ‘குறிஞ்சிச்செல்வா்’ கொ.மா. கோதண்டம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

எளிய குடும்பத்தில் பிறந்து பஞ்சாலைத் தொழிலாளராக தமது வாழ்வைத் தொடங்கிய கோதண்டம், அதே எளிய மக்களுக்கான எழுத்தின் மூலமாக இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி.

அதுமட்டுமன்றி, சிறாா்களுக்கான இலக்கியப் படைப்புகளிலும் பெரும் பங்களிப்பைச் செய்து, இன்றைய தலைமுறை எழுத்தாளா்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவா்.

பால சாகித்திய விருது, குடியரசுத் தலைவா் விருது, தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இவரது நூல்கள், கடந்த ஏப். 5-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்பதையும் நினைவுகூா்கிறேன்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த எழுத்தாளா் கொ.மா. கோதண்டத்தின் மறைவு கலை, இலக்கிய உலகுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப் பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோரும் எழுத்தாளா் கொ.மா. கோதண்டம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com