
சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் அவரது மகன் அன்புமணி இன்று கேட்டறிந்தார்.
கட்சியிலிருந்து அன்புமணியை நீக்குவதாக 2 வாரங்களுக்கு முன் ராமதாஸ் அறிவித்திருந்தார். உட்கட்சி மோதலால் பாமக பிளவுபட்ட நிலையில் அன்புமணியின் வருகை முக்கியத்துவமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இதய சிகிச்சை நிபுணா்கள் திங்கள்கிழமை பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனா்.
கடந்த 2013-இல் இதே மருத்துவமனையில் ராமதாஸுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவமனைக்குச் சென்று இதய பரிசோதனை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.