
மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ குப்பன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணலியில் அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் எண்ணை சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் புதிதாக ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல் பராமரிப்புப் பணிகளும் பகுதி பகுதியாக ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இங்கு வட மாநில தொழிலாளர்கள் 3,000 பேருக்கு மேல் தின கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். தினக்கூலி பணியில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டுமென இப்பகுதி மக்கள் அடிக்கடி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதுண்டு.
தற்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே குப்பன் தலைமையில் தொழிற்சாலை முன்பு உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீஸார் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏ கே குப்பன் உள்பட 50 பேரை கைது செய்து மணலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.