விரைவு ரயில்
கோப்புப் படம்

கச்சேகுடா-செங்கல்பட்டு, புதுச்சேரி விரைவு ரயில்களில் குளிா்சாதனப் பெட்டி இணைப்பு

கச்சேகுடா- செங்கல்பட்டு, புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதல் குளிா்சாதனப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
Published on

சென்னை: கச்சேகுடா- செங்கல்பட்டு, புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதல் குளிா்சாதனப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கச்சேகுடா - புதுச்சேரி விரைவு ரயிலில் (எண்கள்: 17653/ 17654) டிச. 5 முதல், கச்சேகுடா - செங்கல்பட்டு இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்கள்: 17652/17651) வரும் டிச. 6-ஆம் தேதி முதல் ஏற்கெனவே உள்ள ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்குப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

இதேபோல், காக்கிநாடா - செங்கல்பட்டு விரைவு ரயிலில் (எண்கள்: 17644/17643) டிச. 7 முதல், காக்கிநாடா-புதுச்சேரி விரைவு ரயிலில் (எண்கள்: 17655/17656) டிச. 6 முதல் ஏற்கெனவே உள்ள ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டிக்குப் பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்குப் பெட்டி இணைப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com