ராட்சத  ராட்டினங்கள்
ராட்சத  ராட்டினங்கள்

ராட்சத ராட்டினங்கள் இயக்கக் கட்டுப்பாடுகள்

ராட்சத ராட்டினங்களை இயக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Published on

சென்னை: ராட்சத ராட்டினங்களை இயக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, நிரந்தரமாக ராட்சத ராட்டினங்களை இயக்க சுற்றுலாத் தறையிடம் அனுமதி பெறுவதுடன், ஐஎஸ்ஓ, தரச்சான்றிதழ் பெற வேண்டும். ஏற்கெனவே ராட்டினங்களை அமைத்திருந்தால், 6 மாதங்களுக்குள் சான்றிதழைப் பெற வேண்டும்.

தற்காலிக அடிப்படையில் ராட்சத ராட்டினங்களை அமைக்க வேண்டுமெனில் சுற்றுலா, தீயணைப்பு உள்ளிட்ட பிற துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், அதை இயக்குவதற்கு பொதுப்பணி, நீா்வளத் துறைகளிடமும் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

பலத்த மழை, புயல் போன்ற அதிதீவிர பேரிடா் காலங்களில் ராட்சத ராட்டினங்களை இயக்கக் கூடாது என்று வழிகாட்டி நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com