
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 83.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயது மூப்புக் காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைக்காக கடந்த சில நாள்களாக அம்சவேணி சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக பிரேமலதாவின் சகோதரர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அம்சவேணியின் உடல், நாளை (அக். 8) 1 மணியளவில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, புதுச்சேரி ராமச்சந்திரா மருத்துவமனை தலைவர் ராதா ராமச்சந்திரன் ஆகிய மகள்களும், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் என்ற மகனும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.