
சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை திங்கள்கிழமை நள்ளிரவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சென்னையில் தாழ்வானப் பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை வி.பி. இராமன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை நேற்று நள்ளிரவு அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை நடத்திய துணை முதல்வர், பருவ மழை தொடங்கும் முன்பாக, இந்தப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.