
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் - தலைவர் ராமதாஸ் இன்று (அக். 7) வீடு திரும்பினார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக ராமதாஸ் கடந்த 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, மூத்த இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் ராமதாஸுக்கு பரிசோதனை செய்தனர். தொடர்ந்து முழு உடல் பரிசோதனையும் நடைபெற்றது.
இரு நாள்கள் ஓய்வுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து ராமதாஸ் இன்று வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸை முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அன்புமணி உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இதையும் படிக்க | விஜய் வெளியில் வர பயந்துகொண்டிருக்கிறார்: துரைமுருகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.