மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன தேவை குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இன்று(அக்.7) காலை 10:00 மணிக்கு வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு வினாடிக்கு 6266 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,000 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாகவும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 112.69 அடியாகவும், அணையின் தற்போதைய நீர் இருப்பு 82.29 டிஎம்சியாக உள்ளது.
Reduction in the amount of water released from Mettur Dam for Cauvery Delta irrigation!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

