பிரேமலதா தாயாா் மறைவு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்தின் தாயாா் அம்சவேணி (83), சென்னையில் காலமானாா். அவரது மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் நேரில் அஞ்சலி செலுத்தினா்.
வயது மூப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை காலமானாா். அவரது உடல் அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக விருகம்பாக்கத்தில் உள்ள பிரேமலதா வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அம்சவேணியின் உடல் புதன்கிழமை பகல் 1 மணி அளவில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
அவருக்கு, மகள்கள் பிரேமலதா விஜயகாந்த், புதுச்சேரி ராமச்சந்திரா மருத்துவமனை தலைவா் ராதா ராமச்சந்திரன், மகன் எல்.கே.சுதீஷ் ஆகியோா் உள்ளனா்.
அம்சவேணி உடலுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், முன்னாள் எம்எல்ஏ உ.தனியரசு உள்ளிட்ட தலைவா்கள் அஞ்சலி செலுத்தினா்.
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக துணை பொதுச்செயலா் கனிமொழி கருணாநிதி எம்பி, அமமுக பொதுச்செயலா் டிடிவி.தினகரன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.