
காஸா இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் நேற்றுடன்(அக். 7) இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸா நகரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. காஸாவுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போரை நிறுத்த டிரம்ப், 20 அம்ச திட்டத்தை வகுத்துள்ளார். இதற்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்த நிலையில் ஹமாஸ் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளது. ஹமாஸ் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதால் காஸா மக்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். எனினும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது.
இந்நிலையில் காஸா இனப் படுகொலையைக் கண்டித்து 'சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும்' என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று(அக். 8) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் மற்றும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.