
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி நிவாரண நிதியை வழங்கினார்.
கரூரில் கடந்த செப். 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும், 100 -க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சமும் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஏற்கெனவே, பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகின்றது.
இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள செந்தில் பாலாஜி தெரிவித்திருப்பதாவது:
”கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை, இன்று சந்தித்து நலம் விசாரித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கரூரில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தவெக தரப்பில் தலா ரூ. 20 லட்சமும், மத்திய அரசு தரப்பில் தலா ரூ. 2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தரப்பிலும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.