உள்ளூர் செய்தியாளர்களிடம் சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை!

உள்ளூர் செய்தியாளர்களிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினரின் விசாரணை தொடர்பாக...
கரூர் பிரசாரத்தில்...
கரூர் பிரசாரத்தில்...
Published on
Updated on
1 min read

கரூரில் உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் புதன்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கரூரில் கடந்த 27-ம்தேதி வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தற்போது குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் 27-ம்தேதி இரவு நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது, விஜய்யின் பிரசாரம் மற்றும் நெரிசல் ஏற்பட்டு மூச்சுத்திணறலால் பலர் உயிரிழந்ததையும், உயிருக்கு போராடி ஆம்புலன்ஸ்களில் அவர்களை அனுப்பி வைத்ததûயும் விடியோவில் பதிவு செய்து உள்ளூர் தொலைக்காட்சிகளைச் சேர்ந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர்.

இந்த நிலையில் இந்தக் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐ.ஜி.அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவினர் கடந்த 4 நாட்களாக கரூரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் ஆகியோருக்கு சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் வகையில், சிறப்பு புலனாய்வுக்குழுவினர் சார்பில் சம்மன்(அழைப்புக்கடிதம்) அனுப்பப்பட்டது.

இதையடுத்து புதன்கிழமை காலை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள பயணியர் மாளிகையில் தங்கியிருக்கும் (எஸ்ஐடி) சிறப்பு புலனாய்வுக்குழுவினரிடம் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் ஆஜராகினர்.

அவர்களிடம் சம்பவம் நடைபெற்றபோது எடுத்த விடியோக்கள் எங்களுக்கு நாளை(அக்.9-ம்தேதிக்குள்) வழங்கவேண்டும் என்றும், அந்த விடியோக்கள் மூலம் பல உண்மைகளை கண்டறிய முடியும் எனக்கூறி அவர்களை சிறப்பு புலனாய்வுக்குழுவினர் அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com