
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 8) 2வது முறையாக சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 91,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ள காரணத்தால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்து ரூ.89,000-க்கும், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.89,600-க்கும் விற்பனையானது.
இதனிடையே, இன்று(அக். 8) காலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக 2வது தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 11,385-க்கும், சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 91,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.170-க்கும், கிலோவுக்கு ரூ. 3000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மூன்று நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.