ராமதாஸிடம் நலம் விசாரித்த திருமாவளவன்!

பாமக நிறுவனர் ராமதாஸிடம் திருமாவளவன் நலம் விசாரித்தது பற்றி...
 Thol. Thirumavalavan
ராமதாஸ் | தொல். திருமாவளவன்
Published on
Updated on
1 min read

பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நிலை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த அக். 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மூத்த இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் ராமதாஸுக்கு பரிசோதனை செய்தனர். ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாள்கள் ஓய்வுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து ராமதாஸ் நேற்று(அக். 7) வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸை முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அன்புமணி உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில்,

"பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

VCK leader Thol. Thirumavalavan inquire PMK founder Ramadoss about his health over phone

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com