விஜய் விரைவில் கரூர் வருகிறார்..! டிஜிபியிடம் பாதுகாப்பு கோரியுள்ளோம்! - தவெக நிர்வாகி

தவெக தலைவர் விஜய் விரைவில் கரூர் வரவிருப்பதாகவும், அவர் வருகைக்கு பாதுகாப்பு கோரியுள்ளதாகவும் தவெக கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ் தெரிவித்துள்ளதைப் பற்றி...
தவெக கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ்.
தவெக கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ்.கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சிறப்புப் புலனாய்வு குழுவின் உண்மையான விசாரணைக்கு பின்பு தான் கரூரில் என்ன நடந்தது என்பது தெரிய வரும் என தமிழக வெற்றிக் கழகக் கொள்கை பரப்புச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரியமான அருண்ராஜ் தெரிவித்தார்.

தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் புதன்கிழமை காலை தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற எங்களை அனுப்பி உள்ளார். அதன் பேரில் பாதிக்கப்பட்டவர்களைக் கடந்த இரண்டு நாள்களாக 33 பேரை சந்தித்து விஜய்யை விடியோ கான்பரன்ஸ்ங்கில் மக்களிடம் பேச வைத்தோம்.

அப்போது அவர்கள் விஜய்யிடம், நெரிசல் சம்பவத்தில் உங்களிடம் எந்த தவறும் கிடையாது, நீங்கள் தைரியமாக இருங்கள் என்றனர். மேலும் விஜய் கரூர் வந்து விரைவில் உங்களை சந்திப்பேன் என்று பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்தார்.

இதனால், விஜய்யை கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் வகையில் அவருக்கு உரிய பாதுகாப்பு கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று மின்னஞ்சல் மூலம் மனு அளித்தோம்.

இன்று எங்களது கட்சி நிர்வாகிகள் டிஜிபியை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க உள்ளனர். தற்போது விசாரணை குழு இந்த சம்பவத்தை விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்குப் பின் இங்கு என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரிய வரும்” என்றார்.

தவெக கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ்.
துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Summary

Vijay is coming to Karur soon.. We have requested security from the DGP! - Thaveka administrator

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com